கொங்கணாபுரத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில்  ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 18 Dec 2022 1:30 AM IST (Updated: 18 Dec 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

எடப்பாடி,

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 1,500 பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.6 ஆயிரத்து 369 முதல் ரூ.8 ஆயிரத்து 710 வரை விற்பனையானது. இதே போல் கொட்டு ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.3 ஆயிரத்து 259 முதல் ரூ.5 ஆயிரத்து 669 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஏலத்தின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் போனது.


Next Story