கூட்டுறவு வார விழா


கூட்டுறவு வார விழா
x

திருமக்கோட்டையில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது

திருவாரூர்

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 69- வது கூட்டுறவு வார விழா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் நடந்தது. திருவாரூர் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா முன்னிலை வகித்தார்.‌ மன்னார்குடி துணை பதிவாளர் ராமசுப்பு, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ். ஆர்.தேவதாஸ், பாலஞானவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணிமோகன், கூட்டுறவு சங்க தலைவர் பூபாலன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ரஞ்சித்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேணுகா வெற்றிவேல், ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள், சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் பயிர் கடன் வழங்கப்பட்டது. விழாவில் திருமக்கோட்டை கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பயனாளிகள், எளவனூர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பயனாளிகள், மேலநத்தம் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பயனாளிகள் கடன் பெற்றனர். முடிவில் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story