பனைஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம்


பனைஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பனைஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரிக்கை

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட வேம்பி மதுரா பூரி குடிசையில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் பனை ஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க வேண்டும், கள்ளச்சாராய வழக்கு போடுவதை கண்டித்தும், பெண்களை இழிவாக பேசும் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா, இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை, வருவாய் ஆய்வாளர் நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் வாசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால் கள் இறக்க அனுமதி வழங்கும் வரையிலும், பொய்வழக்கு போடுவதை நிறுத்தும் வரையிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற அதிகாரிகள் இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.


Next Story