கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்- 7-ந் தேதி நடக்கிறது


கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்- 7-ந் தேதி நடக்கிறது
x

கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

திருநெல்வேலி

கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நெல்லையில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

கருத்து கேட்பு கூட்டம்

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் கும்பாபிஷேக நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் உள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானம் அருகே உள்ள பி.பி.எல். திருமண மண்டபத்தில் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

குழு உறுப்பினர்கள்

கும்பாபிஷேகம் தமிழில் நடத்துவது குறித்து குழுவின் உறுப்பினர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் குன்றக்குடி மருதாச்சலடிகளார், சத்தியவேல் முருகனார், சுகி.சிவம் மற்றும் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் துணை அலுவலர், கூடுதல் ஆணையர் ஆகியோர் தலைமையில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி மற்றும் நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர், மாவட்ட உதவி ஆணையர்கள், தலைமையிட உதவி ஆணையர்கள் உள்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர். இதில் கோவில்களின் நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


Next Story