நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குப்பை தரம் பிரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்


நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குப்பை தரம் பிரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
x

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் குப்பை தரம் பிரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை எப்படி தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்களுடன் என் குப்பை, என் பொறுப்பு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள், மற்றும் பொதுமக்களிடம் நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் பேசும்போது:-

வியாபாரிகள் தங்களது கடைகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பையாகவும், மக்கா குப்பையாகவும் பிரித்து வழங்கினால் நகராட்சி ஊழியர்கள் அதனை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும், இதேபோல் பொதுமக்களும் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இந்த கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story