கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரிகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்:
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். பென்ஷன் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய ஆய்வுக்கூட்டம் 35 மற்றும் 36-ல் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், செயலாளர் பழனிவேல், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் பாபு, திருமுருகன், ஸ்டாலின், மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமாரி, கடலூர் மாவட்ட கட்டுமான சங்க நிர்வாகிகள் சுந்தரவடிவேல், நடராஜன், கருணாகரன், குப்புசாமி, வில்லியம்ஸ், மனோரஞ்சிதம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.