விழுப்புரத்தில்கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், நலவாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும், அனைவருக்கும் பென்ஷன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தால் இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், நாராயணன், கன்னியப்பன், செல்வக்குமார், வெங்கடேசன், வேலு, சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.