ஆமை வேகத்தில் தார்சாலை அமைக்கும் பணி
கூடலூர் அருகே ஆமை வேகத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி
கூடலூர் அருகே குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த தார்சாலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அதன்பின்பு தார்சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் தார்சாலை அமைக்கப்படாத இடத்தில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து காற்று மாசு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story