இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டுமான பணி
ஆனைக்குட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு 109 வீடுகள் கட்டுமான பணியினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
ஆனைக்குட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு 109 வீடுகள் கட்டுமான பணியினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டுமான பணி
சிவகாசி தாலுகாவில் உள்ள ஆனைக்குட்டத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதியில் 109 வீடுகளை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசீலன், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது திட்ட இயக்குனர் தண்டபாணி, சிவகாசி ஆர்.டி.ஒ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், தனி தாசில்தார் (இலங்கை தமிழர் நலன்) ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ், பஞ்சாயத்து செயலர் முத்துப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
அடிப்படை வசதிகள்
ஆய்வுக்கு வந்த கலெக்டர் ஜெயசீலனிடம், இலங்கை தமிழர்கள், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். உடனடியாக செய்து கொடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.