காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
x

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் ஐ.என்.டி.யூ.சி. மாநில அமைப்புச் செயலாளருமான பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் எட்டயபுரம் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார்.

இந்த மறியல் போராட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ் வெள்ளப்பட்டி ஜேசுதாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் இக்னேஷியஸ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் எட்டயபுரம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.


Next Story