வடக்கன்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வடக்கன்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வடக்கன்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் வடக்கன்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிங்கராஜா, பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வள்ளியூர் ஒன்றிய துணை தலைவரும், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவருமான வெங்கடேஷ் தன்ராஜ் செய்து இருந்தார்.


Next Story