காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்
x

நெல்லையில் காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் 2024-ம் ஆண்டிற்கான உள்கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியீடுதல் ஆகியவை நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் துணை அதிகாரி ஜெஸ்மா, நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி வளனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், பைபாஸ் சண்முகவேல், நெல்லை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story