காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

கடையநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டும், விலைவாசி உயர்வை கண்டித்தும் பொதுமக்களிடம் விளக்கும் விதமாக பாதயாத்திரையை நேற்று மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பாதயாத்திரை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தொடங்கி பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், பஜார் வழியாக மீண்டும் மணிக்கண்டில் நிறைவடைந்தது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஹிதாயத்துல்லா கலந்து கொண்டு மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து பேசினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் சட்டநாதன், மாநில பேச்சாளர் பால்துரை, டாக்டர் சங்கரகுமார், நகர தலைவர் சமுத்திரம், வக்கீல் எஸ்.ஆர்.ரமேஷ், சுரேஷ், தேவேந்திரன், உட்பட பலர் பங்கேற்றனர். சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.


Next Story