மனைவி பரபரப்பு புகார்: தூத்துக்குடி தாசில்தார் மீது வழக்கு


தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனைவி பரபரப்பு புகார் தெரிவித்ததன் பேரில் தூத்துக்குடி தாசில்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் ஞானராஜ். தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இந்த நிலையில் தாசில்தார் மீது அவரது மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாராம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் தாசில்தார் ஞானராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story