ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
வெங்கடாம்பட்டி பஞ்சாயத்தில் ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சின்னக்குமார்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியின் கீழ் ரூ.20 லட்சம் ம்திப்பிலான புதிய சமுதாய நலக்கூடமும், நெல்லையப்பபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவி ஸாருகலா ரவி தலைமையில் நடை பெற்றது.
விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி அமைப்புச் செயலாளர் ராதா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story