பெரியகுளத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
பெரியகுளத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
பெரியகுளம் வட்டார அளவில், சமூகநல பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா, பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. கே.எஸ்.சரவணக்குமார் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பெரியகுளம் நகர தி.மு.க. செயலாளர் முகமது இலியாஸ், பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டி (தாமரைக்குளம்), நடேசன் (வடுகப்பட்டி), நாகராஜ் (தென்கரை), முருகேஸ்வரி (தேவதானப்பட்டி), பெரியகுளம் நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவர் துரைப்பாண்டி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 120 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு, 5 வகை உணவு, வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.