சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
x

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி யூனியன் தலைவர் ராதிகா பிரபு தலைமையில் நடந்தது. யூனியன் ஆணையாளர் புவனேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ ஆலோசனை குறித்து எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து யூனியன் தலைவர் ராதிகா பிரபு 200 கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து சீதன பொருட்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பிரமணியன், மோகன், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மேற்பார்வையாளர்கள் ஜெயலட்சுமி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story