சோலார் மின்மோட்டார் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு


சோலார் மின்மோட்டார் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோலார் மின்மோட்டார் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், தேனி மாவட்டத்தில் பூமலைக்குண்டு, வேப்பம்பட்டி ஊராட்சியில் சோலார் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டது. இந்த மோட்டார்களின் செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சோலார் மின்மோட்டார் மூலம் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடை இல்லாமல் தண்ணீர் பாய்ச்ச முடியும். மோட்டார்கள் பெற மாநில அரசு 40 சதவீதம், மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது என்றார். இந்த ஆய்வில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர் ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story