பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
ஈரோடு
பெரியார் பிறந்தநாள் விழா நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் தந்தை பெரியார் -அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரியாரின் பிறந்தநாளையொட்டி பெரியாரின் பொன்மொழிகள், உரைகள் ஒலிபரப்பப்பட்டது. மேலும் பெரியாரின் இல்லம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.
Related Tags :
Next Story