ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறதபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்கலெக்டர் பழனி தகவல்


ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெறதபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் பழனி அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 3,360 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9,104 மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி (விரல்ரேகை) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story