வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இங்கு 48 கடைகள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு சென்றார். அங்கு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு உள்ள இடவசதி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சத்திரம் வீதி தேர்நிலை திடலில் ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தினசரி காய்கறி சந்தை கட்டுமான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இதையடுத்து கோவை ரோடு சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story