வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதிகளில் ரூ.32¾ லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பன்னாண்டம் கிராமம் மற்றும் கத்தாரி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் மண் வரப்பு அமைக்கும் பணி என மொத்தம் ரூ.32 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நாட்டறம்பள்ளி அருகே கள்ளுக்குட்டை ஏரியில் விநாயகர் சிலை கரைப்பதற்கான முன்னேற்பாடு பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், சதானந்தம், அப்துல் கலீல், ஆத்தூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story