கீரப்பாளையத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கீரப்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
புவனகிரி,
கீரப்பாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கூடுதல் கலெக்டர் அருண்ராய் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்தும், அதன் நிலைகள் பற்றியும் கேட்டறிந்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி தேவதாஸ்படையாண்டவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன், ஒன்றிய பொறியாளர் முருகானந்தம், பணி மேற்பார்வையாளர் அருள்வாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன், மகளிர் குழு கூட்டமைப்பு உதவி திட்ட அலுவலர் கனகவள்ளி , கீரப்பாளையம் கூட்டமைப்பு தலைவர் சரிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மகளிர் தினத்தைெயாட்டி ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு கீரப்பாளையம் இணைச் செயலாளர் அழகம்மாள் தலைமையில் குழுவினர் கலெக்டரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.