பரங்கிப்பேட்டை, பெண்ணாடம் பகுதியில்வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பரங்கிப்பேட்டை, பெண்ணாடம் பகுதியில்வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை, பெண்ணாடம் பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கடலூர்


பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரிய குமட்டி ஊராட்சியில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் ரூ.32 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நடந்து வரும் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்குள்ள அலுவலர்களிடம் பள்ளி கட்டிடத்தை தரமாகவும் விரைவாகவும் கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அங்குள்ள அரசு பள்ளியை ஆய்வு மேற்கொண்டார். அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் படிப்பு திறன்களை பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

கீரப்பாளையம் ஒன்றியம்

தொடர்ந்து, அந்த பகுதியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, பெரியகுமட்டி ஊராட்சி மன்ற தலைவர் மரகதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கம் சுப்பிரமணியன், புவனகிரி தாசில்தார் சிவக்குமார், ஒன்றிய பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், தவுலத்பானு மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி துணை தலைவர், உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

எரப்பாவூர் ஊராட்சி

இதேபோன்று, திட்டக்குடி அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தொளார் ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள், அங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் எரப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அர்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் சமையல்கூடம் கட்டுமான பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பண்ணை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுமான பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தணிகாசலம், திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள உள்பட பலர் உடனிருந்தனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையமும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு கழிவறையும், மேலும் ரூ. 21 லட்சத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இருளம்பட்டு கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, துணை தலைவர் அரவிந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story