அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
திருவெண்காட்டில் சுவேதாரணேஸ்வரர் சுவாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிட பராமரிப்பு, கழிவறை வசதி, விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முரு கண்ணன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, தாசில்தார் செந்தில்குமார், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story