சேந்தமங்கலம் பகுதியில்ரேஷன் கடையில் கலெக்டர் உமா ஆய்வு


சேந்தமங்கலம் பகுதியில்ரேஷன் கடையில் கலெக்டர் உமா ஆய்வு
x
தினத்தந்தி 12 Oct 2023 12:30 AM IST (Updated: 12 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி ரேஷன் கடையில் கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி முத்துக்காப்பட்டியில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கனிமம் மற்றும் சிறுகனிமம் திட்டத்தின் கீழ், பொட்டணம் ஊராட்சி, கல்சினாம்பட்டியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியில் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் பிரதான சாலை, தெற்கு தெரு முதல் தார் சாலை மேம்பாட்டு பணி, ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நடுத்தெரு முதல் ஆலமரம் வரை தார்சாலை மேம்பாட்டு பணி, ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் தெரு முதல் காளியம்மன் கோவில் வரை தார்சாலை மேம்பாட்டு பணி, பேரமாவூர் அங்கன்வாடி முதல் மயானம் வரை ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரேஷன் கடை

தொடர்ந்து, வடுகப்பட்டி ரேஷன்கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க சரியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா ? என ஆய்வு மேற்கொண்டு, ரேஷன் கடைக்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா?, குடிமைப்பொருட்கள் கிடைக்கபெறுவதில் உள்ள நிறை, குறைகள் உள்ளிட்டவைகளை விரிவாக கேட்டறிந்தார். மேலும், ராசிபுரம் தாலுகா குருக்கபுரத்தில் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கும், கோனேரிப்பட்டியில் எல்.பி.ஜி நிலையம் அமைப்பதற்கும் தடையின்மை சான்றுகள் வழங்குவது குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வாழ்த்து மடல்

இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெற தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வாழ்த்து மடல் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் வடுகப்பட்டியில் பெண்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 கிடைப்பது குறித்தும், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல் கிடைக்க பெற்றது குறித்தும் கலந்துரையாடினார்.


Next Story