வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
கங்காதரபுரம், கொழையூர் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குத்தாலம்;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம், கொழையூர் ஊராட்சிகளில் ரூ.60 லட்சம் மதிப்பில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாருதல், குளம் தூர்வாருதல், மரம் நடுதல் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது கங்காதரபுரம் ஊராட்சியில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் புனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ், ஊராட்சி தலைவர்கள் கோவிந்தராஜ் (கொழையூர்) ராதிகா பாஸ்கரன் (கங்காதரபுரம்), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.