15 கலைஞர்களுக்கு விருது வழங்கி கலெக்டர் பாராட்டு


15 கலைஞர்களுக்கு விருது வழங்கி கலெக்டர் பாராட்டு
x

15 கலைஞர்களுக்கு விருது வழங்கி கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

பெரம்பலூர்

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் சார்பில் ஆண்டுதோறும் நுண்கலைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும் விருதுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-22-ம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் 15 பேருக்கு கலை விருது வழங்கப்பட்டது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட கலைஞர்களான ஹாசினி, ரஜிடாரிஜு, கவின் ஆகியோர்களுக்கு கலை இளமணி விருதும், பொற்கிழி தலா ரூ.4 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. 19 வயது முதல் 35 வயது வரை உள்ள இசைக்கலைஞர்கள் கோபி, இளவழகன், செல்வம் ஆகியோர்களுக்கு கலை வளர்மணி விருதும், பொற்கிழி தலா ரூ.6 ஆயிரத்திற்கான காசோலையும், 36 வயது முதல் 50 வயது வரை உள்ள கலைஞர்கள் மார்கேசன், செட்டிகுளம் சாரதாம்பாள், அழகுதுரை ஆகியோர்களுக்கு கலைச்சுடர்மணி விருதும், பொற்கிழி தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. 51 வயது முதல் 65 வயது வரை உள்ள கலைஞர்களான பூமாலை முருகேசன், துரைசாமி ஆகியோருக்கு கலைநன்மணி விருதும், பொற்கிழி தலா ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களான ராஜப்பா, ஜெயராமன், தங்கராஜ் ஆகியோர்களுக்கு கலை முதுமணி விருதும், பொற்கிழி தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. விருது பெற்ற கலைஞர்களுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் பொன்னாடை அணிவித்து, பட்டயம் மற்றும் பொற்கிழிக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, திருச்சி மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, தேவார ஆசிரியர் அரணாரை நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story