தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெருங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள பெருங்குளம் பேரூராட்சியில் தூய்மைப்பணி மற்றும் பொது சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குளம் பேரூராட்சி முழுவதும் சிறப்பு தூய்மை பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பண்டாரவிளையில் நேற்று காலை பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி சண்முகநாதன், தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெருங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story