ஒருங்கிணைந்த தூய்மை பணி
காரிமங்கலம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி
தர்மபுரி
காரிமங்கலம்:
காரிமங்கலம பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சேகர் வரவேற்றார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து உதவி இயக்குனர் குருராஜன் தலைமையில் கவுன்சிலர்கள், பணியாளர்கள் அரிமா சங்கத்தினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்கள் குப்பைகளை தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றில் போடாமல் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். தூய்மை பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story