சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வத்தலக்குண்டுவில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், வத்தலக்குண்டு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மண்டல இணைச் செயலாளர் இலியாஸ் தலைமை தாங்கினார். இதில் ஓய்வு பெற்ற நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story