அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணியை அடுத்த பனையூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளருமான கலைமணி கிராமமக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அவர் மீது ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலி குப்புசாமி அவதூறு வழக்கு தொடர்ந்ததாக பொதுமக்கள் நேற்று ஆரணி -பனையூர் ஊராட்சி கிராம சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும், ஆரணி தாலுகா போலீசார் சென்று விசாரணை நடத்தி உடனடியாக பஸ்சை விடுவித்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story