கிறிஸ்துமஸ் விழா


கிறிஸ்துமஸ் விழா
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலடி அருணா செவிலியர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஆலடி அருணா செவிலியர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேரி வயோலா தலைமை தாங்கினார். துணை முதல்வர் நிஷா வில்சன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் நிர்மலா மேரி வரவேற்றார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் நோக்கம் பற்றி மாணவிகள் எடுத்துரைத்தனர். பல்வேறு வேடங்கள் அணிந்து மாணவிகள் அசத்தினர். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் மதுபாலா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.


Next Story