சோழிய வேளாளர் சங்கம் மற்றும் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா


சோழிய வேளாளர் சங்கம் மற்றும் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது..

திருச்சி

சோழிய வேளாளர் சங்கம் மற்றும் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது..

பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் ஜெயபால் தலைமையில் திருச்சியில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில இளைஞரணி அமைப்பாளர் தங்கம் ரத்தினக்குமார், மாநில அமைப்பாளர் கங்கை மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, கே.பி.டி. பழனிவேல் பிள்ளை, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாநில அமைப்பாளர் டைமன் பாலு, தெற்கு மாவட்ட அமைப்பாளர் வ.உ.சி. கண்ணன், மாவட்ட நிர்வாகி ராஜமாணிக்கம், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊர்வலம்

முன்னதாக திருச்சி சத்திரம் பஸ் நிலையம் தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து மாநில தலைவர் டாக்டர் செந்தில் ஜெயபால் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சமுதாய தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்

அகில இந்தியவ.உ.சி.பேரவை

இதேபோல் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் மாநில தலைவர் லேணா.மு.லெட்சுமணன் தலைமையில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும்., மாநில பொதுச்செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் வயி.ச.வெங்கடாசலம், மாநில கவுரவ தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள் தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து திருச்சி கோர்ட்டு அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் சந்திரசேகர், மாவட்ட செயற்குழு வாளாடி ஜெயகுமார், மாவட்ட துணை செயலாளர் டி.ஜி.எம்.கணேசமூர்த்தி, மலைக்கோட்டை பகுதி தலைவர் மகேஷ்வரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வி.கே.எஸ் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story