சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து சின்னமுட்டத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து சின்னமுட்டத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர் மழை எச்சரிக்கை
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு இரவில் கரை திரும்புவார்கள். மேலும், மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறக்குதல், வாகனங்களில் ஏற்றுதல் போன்ற வேலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் ெதாடர்ந்து 4 நாட்கள் தொடர் மழை பெய்யலாம் என்றும், கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மீன்பிடிக்க செல்லவில்லை
இதைத்தொடர்ந்து நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் பாதுக்காப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர். இதுபோல் பெரும்பாலான கட்டுமர மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.