குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி கிராமத்தில் எருது விடும் விழா நடைப்பெற்றது. விழாவுக்கு ஊர் கவுண்டர் டி.ரவி, ஆர்.மணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜனனி மோகன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா மூர்த்தி, துணைத்தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா, நாட்டறம் பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
200 காளைகள் பங்கேற்பு
விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓடின. முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரம் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வருகை தந்து விழாவை கண்டு ரசித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் மற்றும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.