திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவுப்படி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
திருவள்ளூர்
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி நேற்று திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் "எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக தெரியவந்தால் எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன், எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன்'' என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Related Tags :
Next Story