சட்டம் - ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


சட்டம் - ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x

சட்டம் - ஒழுங்கு குறித்து 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மதுரை,

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 1-ந்தேதி வேலூரிலும், இரண்டாம் கட்டமாக சேலத்திலும் ஆய்வு மேற்கொண்டார். 3-வது கட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் தென்மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story