செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மயிலாடுதுறை

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடையே பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலக முகப்பு பகுதி செஸ் போர்டு போல மாற்றப்பட்டுள்ளது. மேலும் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் செல்பி பூத் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரூராட்சி பிரதான பகுதிகளில் செஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Next Story