செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை - நிர்வாகம் தகவல்


செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை - நிர்வாகம் தகவல்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. அதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.

அதற்கு பதிலாக வருகிற 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story