செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி


செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
x

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடத்தப்பட்டது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கால்பந்தை உதைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செஸ் போட்டி குறித்து விளக்கி பேசினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பஸ் நிலையம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.


Next Story