முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே இடையங்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ேதரை இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் இடையங்கோட்டை, சீனமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story