மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவில் தேரோட்டம்


மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவில் தேரோட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி அருகே உள்ள மல்லிகார்ஜூன துர்கம் மலைக்கோவில் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து அக்னிகுண்டம் வளர்த்தனர். பின்னர் மலை மீதுள்ள மல்லிகார்ஜூன சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் பிரகாஷ் எம்.எல்.ஏ., தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பானகம் வழங்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story