பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள்
தலைமைத்துவம், சமுதாய வளர்ச்சி குறித்து பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ், விளையாட்டு உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.
திருவாரூர்
கொரடாச்சேரி:
திருவாரூரில் தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழினையும், விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் நேரு யுவகேந்தரா துணை இயக்குனர் நீலகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் ராஜகுமார், பொருளாளர் பாலு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story