புழல் சிறையில் 5 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்


புழல் சிறையில் 5 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
x

புழல் சிறையில் 5 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பரும்பாலான கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சிறை போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் விசாரணை சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர்(வயது 40), கொலம்பியாவை சேர்ந்த எட்வின்(38), நைஜீரியாவை சேர்ந்த டேவிட்(22), ஆகஸ்டின் புக்கி(47) மற்றும் சென்னை எர்ணாவூரை சேர்ந்த ரகுமான்(32) ஆகிய 5 கைதிகளிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சிறை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, வெளிநாட்டு கைதிகளுக்கு சிறைக்குள் எப்படி செல்போன் கிடைத்தது? இவர்கள் யாரிடம் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story