காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம்


காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம்
x

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்

கரூர்

தோகைமலை

ஆலோசனை கூட்டம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சின்னபனையூரில் காவிரி, வைகை, குண்டாறு நிலம் கையகப்படுத்தும் நில மதிப்பீடு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. விவசாயி பிச்சை தலைமை தாங்கினார். விவசாயிகள் பாலசுந்தரம், கருணாகரன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டமானது கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனத்தை நம்பி உள்ள விவசாய நிலங்களை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின் மூலம் புதிய கால்வாய் அமைத்தால் ஏற்கனவே பயன் பெற்று வரும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

அதிகவிலை மதிப்பு இல்லை

இதேபோல் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் அமைக்க பெற்று அதன் மூலம் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கட்டளை மேட்டு வாய்க்கால் அருகே புதிய கால்வாய் அமைக்கும் பணிக்காக விவசாயம் செய்து வரும் பாசன நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் பாசன நிலங்கள் அழிந்து வருகிறது. மேலும் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலத்திற்கு அரசு வழங்கும் மதிப்பீடு குறைவாக உள்ளது. மேலும் புதிய கால்வாய் அமைத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 9 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம்

ஏற்கனவே கட்டளை மேட்டு வாய்க்காலில் போதிய தண்ணீர் வருவதில்லை எனவே புதிய கால்வாய் அமைக்கப்பட்டால் பாசன நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். கரூர் மேற்கு பகுதி வறட்சியாக உள்ளதால் கடவூர், தோகைமலை, விராலிமலை வழியாக புதிய கால்வாய் பணியை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் தங்கள் கருத்துகளை முன் வைத்து பேசினர்.காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை நிறுத்தாவிட்டால் உண்ணாவிரதம், மனித சங்கிலி, நடை பயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story