கத்தியைக் காட்டி மிரட்டிய தம்பதி மீது வழக்கு


கத்தியைக் காட்டி மிரட்டிய தம்பதி மீது வழக்கு
x

கடனை திருப்பிக் கேட்டவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய தம்பதி மீது வழக்கு

கன்னியாகுமரி

புதுக்கடை,

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் ஏசுதாஸ், மீனவர். இவரிடம் அதே பகுதியை ேசர்ந்த பிரான்சிஸ் (வயது50), அவரது மனைவி ஷீபா (48) பணம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இதுபோல இவர்கள் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

சம்பவத்தன்று ஏசுதாஸ் உள்பட கடன் கொடுத்தவர்கள் பிரான்சிஸ் வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டனர். அப்போது அவர்களை பிரான்சிஸ்சும் அவரது மனைவியும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஏசுதாஸ் குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தம்பதி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுக்கடை போலீசார், கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story