3 பேர் மீது வழக்கு
கபிஸ்தலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கபிஸ்தலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீவிர ரோந்து பணி
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் அருகே உள்ள தியாகசமுத்திரம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் சண்முகசுந்தரம்(வயது 51), புண்ணியமூர்த்தி(42), அலவந்திபுரம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் அப்துல் காதர்(37) ஆகியோர் கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
3 பேர் மீது வழக்கு
சோதனையில் அவர்கள் 3 பேரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.