மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; தொழிலாளி பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் அசோக் (வயது 23). தொழிலாளி. இவர், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனியை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அதே ஊரை சேர்ந்த மணி மகன் வெங்கடேஷ் (23), மதியழகன் மகன் சூர்யா (12) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் கோமாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திேலயே அசோக் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அசோக் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.