கார் டிரைவர் பலி
திண்டுக்கல் அருகே, சரக்கு ஆட்டோ மோதி கார் டிரைவர் பலியானார்.
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 32). கார் டிரைவர். நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் சீலப்பாடியில் இருந்து சீலப்பாடி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாம் உசேனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சதாம் உசேனுக்கு திருமணமாகி ஜெனிபா (28) என்ற மனைவியும், முகமது சலீம் (7) என்ற மகனும், பர்வீன் என்ற 3 மாத குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.